இயக்குநர் பிரஷாந்த் நீல் KGF படங்களின்மூலம் சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அடுத்ததாக அவர் KGF 3 படத்தையும் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் KGF படங்களை தொடர்ந்து பிரஷாந்த் நீல் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இதனிடையே நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சலார் படம் வரும் 22ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது
முன்னதாகவே இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தை முழுமையாக்க காலஅவகாசம் தேவைப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக முன்னதாக 22ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தையும் ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ள நிலையில் KGF போல இந்தப்படமும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜின் நட்பை பிரதானமாக வைத்து பிரஷாந்த் நீல் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப முன்னதாக வெளியான படத்தின் டிரைலரில் இதையொட்டிய காட்சிகள் காணப்பட்டன. மேலும் அந்த ட்ரெயிலரில் KGF படங்களை நினைவூட்டும் வகையில் காட்சிகள் காணப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. எது எப்படியோ இன்னும் சில தினங்களில் Salaar ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் என்பது தெரியவரும்.
படத்தின் சென்சார் நிறைவடைந்து படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரன்டைமும் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகவுள்ளதாக ஹம்பாலே நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் ஒரேயொரு பாடல்தான் இடம்பெற்றுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில் அந்தப் பாடல் இன்று தற்போது வெளியானது வெளியானது.
கருத்துரையிடுக