கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முண்டவிளைப் பகுதியை சார்ந்தவர் நிஷாந்த் பெங்களூரில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் பள்ளி படிக்கும் போது இவரது உறவினர் மகள் ஒருவரோடு நட்பாக பழகி. , அந்த நட்பு காதலாக மாறியது. இந்த விஷயம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே அவளின் உறவினர்கள் அவளை கண்டித்துள்ளனர். இதனால் நிஷாந்திடம் அந்தப் பெண் பேசுவதை நிறுத்தி உள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து நண்பரிடம் கூறி புலம்பிய நிஷாந்த் பைக்கில் வேகமாக சென்றுள்ளார்.
அவரை பின் தொடர்ந்த நண்பர் நிஷாந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பல இடங்களில் தேடிய போது முட்டைகாடு அருகே சரல்விளை ஆற்றின் கரையில் நிஷாந்தின் பைக் இருந்ததை கண்டு நிஷாந்தை தேடிய போது அங்கே ரப்பர் தோட்டத்தில் ரப்பர் மரத்தில் தூக்கில் தொங்கினார். உடனடியாக இதுகுறித்து அவரது நண்பர் நிஷாந்தின் உறவினர்கள் மற்றும் கொற்றிகோடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துரையிடுக