லாட்ஜ் அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மேலாளர்: போலீசார் விசாரணை



குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 78). இவரது மனைவி காந்திமதி. கடந்த 2002-ம் ஆண்டு கருப்பசாமியின் மனைவி காந்திமதி இறந்து விட்டார்.

இவர்களுக்கு கிருஷ்ண மூர்த்தி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் நெல்லையில் வசித்து வேலை பார்த்து வருகிறார். மேலும் இரண்டு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

இதனால் கருப்பசாமி நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். லாட்ஜிலேயே தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், இன்று காலை அவரை திடீரென காணவில்லை.

லாட்ஜ் உரிமையாளர் சுப்பிரமணியம் அவரை பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து லாட்ஜில் உள்ள அறைகளை சோதனை செய்து பார்த்தபோது ஒரு அறையில் கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் உரிமையாளர், கோட்டார் போலீசுக்கும், நெல்லையில் உள்ள அவரது மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய

சோபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து
விசாரணை நடத்தினார்கள்.

பிணமாக கிடந்த கருப்பசாமி, லாட்ஜில் உள்ள அறையில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலையில் கருப்பசாமி வெளியே செல்வது போன்ற காட்சிகள் இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் கருப்பசாமியின் மகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கருப்பசாமி தனது தந்தை கடந்த 15 ஆண்டுகளாக லாட்ஜில் மேலாளராக வேலை பார்த்து வருவதாகவும், பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு அவ்வப்போது ஊருக்கு வருவதாகவும் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பும் ஊருக்கு வந்த கருப்பசாமி, தற்போது லாட்ஜிலேயே இருப்பதாக தெரிவித்தார்.

வழக்கமாக கருப்பசாமி ஆட்கள் இல்லாதபோது மேற்கத்திய

கழிவறையை பயன்படுத்தி வந்தார். அதேபோல் இன்று காலையிலும் ஆளில்லாத அறையில் உள்ள மேற்கத்திய கழிவுறையை பயன்படுத்திவிட்டு வெளியே வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை