கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உதியாவிளையை சேர்ந்தவர் ஐயப்பன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் அம்பிகா (19). இவர் லட்சுமிபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த இவர் திடீரென மாயமானார்.
நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் அம்பிகா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ஐயப்பன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் அம்பிகாவை தேடி வந்த நிலையில் நேற்று மாலை அம்பிகா திங்கள்நகரை அடுத்த இரணியல்கோணம் கல்லுத்தட்டு விளையை சேர்ந்த கொத்தனார் சுஜின்(23)என்பவருடன் குளச்சல் போலீசில் தஞ்சமடைந்தார்.
இருவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வருவதாக கூறினர். காதல் ஜோடி காவல் நிலையம் வந்ததை அறிந்த இருவரது பெற்றோர்களும் காவல் நிலையம் வந்தனர். சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அம்பிகா காதலன் சுஜினுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதனால் போலீசார் அறிவுரை கூறி அம்பிகாவை காதலன் சுஜினுடன் அனுப்பி வைத்தனர்.

இதனால் காவல் நிலையத்தில் நேற்று மாலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துரையிடுக