தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இரணியல் விநியோகம் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,
குளச்சல் மின் விநியோகப்பிரிவுக்குட்பட்ட உயர் மின் அழுத்த பாதையில் மின் கம்பிகள் மற்றும் மின் தளவாட சாதனங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணிகள் நடக்கவிருப்பதால் 12 ம் தேதி (நாளை ) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கரை, தறியன்விளை, கொத்தனார்விளை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இது போல் செம்பொன்விளை விநியோக உயர் அழுத்த மின் பாதையிலும் மின் தளவாடங்கள் மாற்றும் பணி நடைபெறுவதால் 12 ம் தேதி (நாளை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மத்திக்கோடு, படுவூர், ஈச்சவிளை, சகாயநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
கருத்துரையிடுக