குமரியில் மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள்


மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு புதுக்காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் செலஸ்டின் குமார் (வயது 45). இவர் குற்றிக்காட்டு விளையில் கடை நடத்தி வருகிறார்.

 அங்கு பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு தலைமையிலான போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விளைவிக்கக் ஆபத்து கூடிய குட்கா மற்றும் புகையிலை பொருள்களை பள்ளி யூனிபார்மில் வந்த 14, 15 வயது மாணவர்களுக்கு வி ற்பனை செய்வதை கண்டு பிடித்தனர். 

இதனை அடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வியாபாரி செலஸ்டின் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Post a Comment

புதியது பழையவை