நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் உள்ளது. பரிகாரஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள்.
இவர்கள் நாகர் சிலைகளுக்கு மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு செய்வார்கள். அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதுடன், நாகருக்கு உகந்த ஆயில்ய நட்சத்திரம் ஆகும். இதனால் நாகராஜா கோயிலில் காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் நின்று பால், மஞ்சள் ஊற்றி வழிபாடு செய்தனர். ஆயில்யத்தை யொட்டி நாகராஜா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
கருத்துரையிடுக