குமாரபுரம் அருகே முட்டைக்காடு பகுதி செட்டியார் தோப்பு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜாப்ரின் பென்னட் (45). இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு தேவாலய திருவிழாவுக்காக வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த தேவாலயத்தில் எட்டாம் திருவிழாவை முன்னிட்டு, குடும்பத்தினருடன் மாலையில் தேவாலயத்துக்கு சென்றுள்ளார். அங்கு சென்று விட்டு இரவு ஏழு மணி அளவில் வீட்டுக்கு ஜாப்ரின் வந்த போது, வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது குடும்பத்தினர் தேவாலயத்திற்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யாரோ வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, அறையில் இருந்த 8 பவன் நகை, 5 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து கொற்றிக்கோடு போலீசில் ஜாப்ரின் பென்னட் புகார் செய்தார். அதன் வேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீடு முழுவதும் சோதனை நடத்தி, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துரையிடுக