பூதப்பாண்டியை அடுத்துள்ள அம்பட்டையான் கோணம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் திட்டுவிளைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சிறுமியும் அவரது தாயும் நாகர்கோவில் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் திட்டுவிளை பேருந்து நிறுத்த வரை வந்தனர்.
அங்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நாகர்கோவிலுக்கு பஸ்ஸில் செல்ல வேண்டி திட்டு விளை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள பயணிகளின் நிழற்குடை யில் தாயும் மகளும் அமர்ந்திருந்தனர்.
அப்போது திடீரென நிழற்குடையின் மேல் கூரை கான்கிரீட் பயங்கர சத்தத்துடன் இடிந்து கீழே விழுந்தது. இதில் பள்ளி சிறுமியின் தலை மற்றும் கால் பகுதியில் காங்கிரீட் துண்டுகள் பட்டு ரத்தம் வழிந்தது.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஓடி வந்து, சிறுமியை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அதிர்ஷ்டவசமாக பெரிய ஆபத்திலிருந்து சிறுமியும், தாயும் தப்பியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்
கருத்துரையிடுக