கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சார்ந்த 17 வயது பிஎஸ்சி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென வயிறு வலியால் அவதிப்பட்டுள்ளார்.
மாணவியின் தாய் அவளை அழைத்துக்கொண்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த மாணவி ஏற்கனவே கர்ப்பமாகி கருகலைக்கப்பட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் யார் காரணம் என கேட்டதில் மாணவி தன்னுடைய கர்ப்பத்திற்கு சித்தப்பா முறை கொண்ட ஒருவர் காரணம் என கூறியுள்ளார். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபரை மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் நாகர்கோவில் சிறையில் அடைத்துள்ளன சித்தப்பா முறை கொண்ட ஒருவர் திருவியை கர்ப்பமாகிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கருத்துரையிடுக