மண்டைக்காட்டில் இன்று நள்ளிரவு வலியபடுக்கை


கன்னியாகுமரி மாவட்டம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவின் 6 ம் நாள் வெள்ளிக்கிழமை, அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்த பங்குனி மாத பரணி நட்சத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் மூன்று முறை மட்டும் வலியபடுக்கை பூஜை நடக்கிறது. 

இன்று கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் இன்று நள்ளிரவு வலியபடுக்கை பூஜை நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4. 30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 

5. 30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6. 30 மணிக்கு உஷபூஜை, மதியம் 1 மணிக்கு உச்சபூஜை, தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 மாலை 6. 30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு நாதஸ்வரம், 8. 30 மணிக்கு அத்தாழபூஜை, 9. 30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12. 30 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது. நிகழ்ச்சியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

Post a Comment

புதியது பழையவை