கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேற்கிளம்பி சாகைவிளைப்பகுதியை சார்ந்தவர் தங்கராஜ். கூலி தொழிலாளி.
இவர் சம்பவத்தண்று சைக்கிளில் தனது வீட்டில் இருந்து பூவன்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது குளச்சலில் இருந்து குலசேகரத்திற்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து தங்கராஜ் மீது மோதியது.
இதில் தங்கராஜ் படுகாயம் அடைந்தார். அருகில் இறந்தவர்கள் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்த நாள் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருவட்டார் போலீசார் அரசு பஸ்சை ஓட்டி வந்து ரவீந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைக்கிளில் வந்த கூலி தொழிலாளி அரசு பேருந்து மோதி மரணம் அடைந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துரையிடுக