குமரி மாவட்ட பெண்கள் சுயதொழில் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று நாகர்கோவில் பத்திரப்பதிவாளர் அலுவல கத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: -ஏழை, எளிய மக்கள் சிறு, சிறு இடங்கள்தான் வாங்க முடியும். தற்போது 22 ஏ என்ற பிரிவைக் கொண்டு வந்து மறு பத்திரம் பதிவு செய்யக்கூடாது,
விற்கக்கூடாது இடத்தை விலைக்கு வாங்கியவர்களும், விற்றவர்களும் என்ன செய்வார்கள் நாங்கள் வாங்கிய இடத்தை விற்க முடியாத காரணங்களால் நிலத்தை வாங்கியவர்கள்-
விற்றவர்களுடன் சண்டை போடும் சூழல், கோர்ட்டு, வழக்கு என்று செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இடம் விற்பனை செய்ய முடியாததால் பல திருமணங்கள் நின்று போய் உள்ளது.
பிள்ளைகளின் படிப்பு நின்றுவிட்டன. இடங்கள் விற்க, வாங்க முடியாததால் கட்டிடத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இலவச வீடு கட்டித்தர வேண்டாம். எங்கள் இடத்தில் வீடு கட்டவும், வாங்கவும் அனுமதி தாருங்கள்.
ஏழைகளாகிய எங்களை காப்பாற்றுங்கள். இல்லையென்றால் தற்கொலை செய்து சாவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே தமிழக அரசும், பத்திரப்பதிவு த்துறையும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு தற்போதுள்ள 22 ஏ என்ற பிரிவை முற்றிலுமாக நீக்க, ஏற்கனவே இருந்தது போன்று அனைத்து மக்களும் நிலம் வாங்கி வீடு கட்டும் வகையில் சட்டத்தை மாற்றி அமைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
கருத்துரையிடுக