கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமமான கோதையார் லோயருக்கு கன்னியாகுமரியில் இருந்து
நாகர்கோவில், தக்கலை, ஆற்றுர், திற்பரப்பு, களியல், பேச்சிப்பாறை, ஜீரோ பாயிண்ட், கோதையார் மின் உற்பத்தி நிலையம், அரசு ரப்பர் தோட்டங்கள் வழியாக கடந்த 65 ஆண்டுகளாக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பத்துக்கு மேற்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு வசதியாக இந்த பேருந்து அவர்களுக்கு வரபிரசாதமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து இந்த பேருந்து திடீரென நிறுத்தப்பட்டு. கோதையார் லோயருக்கு குலசேகரத்தில் இருந்து பேருந்து இயக்கப்படுகிறது. 65 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்த பேருந்தை மாற்றியது மலை கிராம மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தாங்கள் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு செல்வது சிரமமாகியுள்ளது என்று தெரிவிக்கும் இந்த பகுதி மக்கள் உடனடியாக பேருந்து திரும்ப இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துரையிடுக