கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கண்ணுமாமூடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பளுகல் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் இன்று போலீசார் அந்த பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர், அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு வீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் சென்று வருவது தெரியவந்தது. உடனடியாக அந்த வீட்டை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் செய்து வருவது தெரிய வந்தது, அதை அடுத்து அங்கிருந்த நான்கு பெண்கள் உட்பட ஆறு பேரை போலீசார் அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
அதில் நான்கு பெண்களையும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து புத்தன்சந்தை தெற்றிகுழி கனியாரங்கோடு பகுதியைச் சேர்ந்த ஷஜி(47) , சுவாமியார் மடம் , பிலாவிளை பகுதியை சேர்ந்த சுஜின் (29) ஆகியோரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்த பரக்குன்று எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த தாஸ் (40) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
கருத்துரையிடுக