கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் 4 தேர்களில் பவனி.

 



குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய  திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று முன்தினம்  இரவு தேர் பவனி தொடங்கியது.   பத்தாம் திருவிழா நேற்றும் இந்த பவனி நடைபெற்றது. இந்த நாட்களில் 3 தேர்களில் பவனி நடந்தது.  


       விழாவின் கடைசி நாளான இன்று காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து 11 மணிக்கு தேர் பவனி நடந்தது. இந்த பவனியில் நான்கு தேர்கள்  இழுத்துவரப்பட்டது. முதல் தேரில் மிக்கேல் அதிதூதரும், இரண்டாவதாக புனித செபஸ்தியார், மூன்றாவதாக புனித சவேரியார் தேர்கள் இழுத்து வரப்பட்டன.   


   இது தொடர்ந்து நான்காவதாக புனித தேவமாதா தேர் இழுக்கப்பட்டது. தேருக்கு பின்னால் பக்தர்கள் நேர்ச்சைகள்  செலுத்தும் வகையில் கும்பிட்டு நமஸ்காரம் மற்றும் தரையில் உருண்டு வணங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் தேர் திருவிழாவில் தேரில் வைத்து திருப்பலி நடக்கிறது. இதை காண ஆயிரக்கணக்கானோர் திரள்கின்றனர்.

Post a Comment

புதியது பழையவை