நாகர்கோவில் கோட்டார் டி. வி. டி. காலனியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது கலைவாணர் நகரை சேர்ந்த சரண் (வயது 25) என்பவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அப்பகுதியில் உள்ள மறைவான இடத்துக்கு வரும்படி கூறினார்.
இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவரும், அவரது நண்பர் சுரேஷ் (18) என்பவரும் அங்கு சென்றனர். அப்போது சரண், சந்திரன், அஜித், பிரகாஷ் மற்றும் சிவா ஆகியோர் மது குடித்துக் கொண்டு இருந்தனர்.
கல்லூரி மாணவர் வந்ததும் அவரிடம் 5 பேரும் தகராறு செய்ததோடு பீர் பாட்டிலால் கல்லூரி மாணவரின் காலில் தாக்கினர். அதை தடுக்க முயன்ற சுரேசும் தாக்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதுபற்றி கோட்டார் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர் புகார் அளித்தார். அதன்பேரில் சரண் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துரையிடுக