சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை



கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்ற பாபு(26).  இவர் 2020ம் ஆண்டு தனது உறவினரின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் சங்கரை கைது செய்தனர்.

  இவ்வழக்கு நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  வழக்கின் தீர்ப்பு இன்று கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ஜாய்,  

சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த சங்கருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Post a Comment

புதியது பழையவை