கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட சிட்டான் விளை வாய்க்கால் கரையில் அரசு புறம்போக்கு நிலத்தில் நின்ற சுமார் 60 ஆண்டு பழக்கமுள்ள அயனி மரம் 04. 12. 23 தேதி பெய்த மழையில் வேரோடு விழுந்தது.
இது குறித்த ஊராட்சி தலைவர் அனுஷம் ஐயப்பன் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் அடுத்த நாள் ஐந்தாம் தேதி மரத்தை அப்புறப்படுத்துவதாக கூறி சென்றனர்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே சிலர் மரத்தை அறுத்து வெட்டிக் சென்றுள்ளார். இந்த நிலையில் ஊராட்சி தலைவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வெட்டப்பட்ட மரம் எப்போது ஏலம் விடப்படும் என்று கேட்டுள்ளார். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நாங்கள் மரத்தை வெட்டவில்லை எனக் கூறியுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த அனுஷனை ஐயப்பன். மரத்தை வெட்டிய நபர்களின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியும் அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் கண்காணிப்பாளர், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
மழையில் விழுந்த அரசுக்கு சொந்தமான மரத்தை அதிகாரிகள் வந்து பார்வையிட்ட அடுத்த நாளே பகலில் மர்ம நபர்கள் வெட்டிச்சென்ற சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துரையிடுக