அழகிய மண்டபம் சந்திப்பில் உள்ள தர்ஹாவுக்குள் நேற்று இரவு நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த கண்ணாடி, விளக்குகள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்தும் கபர் எனப்படும் சமாதியின் மேல் போர்த்தி இருந்த பச்சை துணிகளை எல்லாம் அலங்கோல படுத்தியும் தர்ஹாவை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் தர்ஹாவுக்குள் நுழைந்து பார்த்தபோது பொருட்களெல்லாம் உடைக்கப்பட்டு விளக்குகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பொதுமக்களிடம் பிடிபட்டதும் அந்த நபர் ஆக்ரோஷமாக அருள் வந்து ஆடுவது போல தரையில் படுத்து உருண்டு ஆக்ரோஷமாக கத்தியவாறு எதையெதையோ புலம்பி தள்ள அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் திருவிதாங்கோடு காட்டுவிளை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது. மது அருந்திவிட்டு போதையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்த ரமேஷை பொதுமக்கள் அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மனைவி சம்பவ இடம் வந்ததும் ஆம்புலன்ஸை வரவழைத்து தக்கலை அரசும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துரையிடுக