தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு


தீபாவளி பண்டிகைகளை கட்ட தொடங்கியுள்ள நிலையில் பட்டாசு கடைகளில் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் உள்ள பள்ளிகளில் தீயணைப்புத் துறையினர் மாண வர்க ளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள். தீயணைப்புத் துறையினர் மாணவர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரையில் கூறியிருப்பதாவது..

பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் மேற்பார்வையில் சிறுவர் கள் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது அருகில் ஒரு வாளி தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வெளியில் திறந்த வெளியில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்கும் போது தளர்வான ஆடைகளை அணியக்கூடாது. குடிசை கள் நிறைந்த பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது.

 ஆஸ்பத்திரிகள் திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது. 

நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சிக்கக் கூடாது.

 எரியும் அடுப்பு பக்கத்தில் பட்டாசுகளை வைக்கக்கூடாது. பட்டாசு களை சிறுவர்கள் கையில் எடுத்து விளையாட அனும திக்கக்கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை வெட்ட வெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது. தீ விபத்து ஏற்பட் டால் உடனடியாக தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண் டும். ஆடையில் தீப்பற்றிக் கொண் டால் ஓடக்கூடாது உடனே தரையில் படுத்து உருள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறை சார்பில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Post a Comment

புதியது பழையவை