குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அடுத்தடுத்து உள்ளவர்களும் காய்ச்சலால் அவதிப்படும் நிலை உள்ளது.
இந்த காய்ச்சல் பாதிப்பில் பள்ளி மாணவர்கள் பலரும் தற்போது பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகிறார்கள்.
காய்ச்சல் பாதிப்பின் காரணமாக ஆஸ்பத்திரி களுக்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனியார் ஆஸ்பத்திரி கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் வழக்கமாக 1500 பேருக்கு மேற்பட்டோர் புற நோயாளி யாக வந்து மருந்து வாங்கி வருகிறார்கள்.
ஆனால் சமீப காலமாக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் மருந்து வாங்கி செல்கிறார்கள்.
இதில் ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் வந்து செல்கின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்புடனும் ஆஸ்பத்திரியில் சிலர் சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.
அவர்களுக்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கன்னியா குமரி, குளச்சல், குழித்துறை அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் காய்ச்சல் பாதிப்பால் மருந்து வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொசு அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கருத்துரையிடுக