மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.80 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் நேற்று (செப்டம்பர் 30) திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்தது.
பான் இந்தியா முறையில் உருவான இப்படத்தின் இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.500 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், படம் முதல் நாள் வசூலாக நேற்று உலகம் முழுவதும் ரூ.80 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது
அதேசமயம், தமிழ்நாடு முழுவதும் ரூ.27 கோடியை படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் கேரளாவில் மட்டும் ரூ.3.20 கோடியை வசூலித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ரஜினியின் '2.0’, 'கபாலி’ படங்களுக்குப் பிறகு அதிக அளவு முதல் நாள் வசூலை 'பொன்னியின் செல்வன்' குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துரையிடுக