நாகா்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்


ஓணம் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அத்தப்பூ கோலமிடவும், வீட்டில் அறுசுவை விருந்து சமைக்கவும் அதற்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டனர்.

 இதன் காரணமாக நாகர்கோவில் வடசேரி, ஒழுகினசேரி, கோட்டார், கலெக்டர் அலுவலக சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்தபடி சென்றன. முக்கியமாக ஒழுகினசேரி பாலத்தை கடக்கவே வெகு நேரம் ஆனது. 

இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதே போல பஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இது ஒருபுறம் இருக்க ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை நேற்று விறு விறுப்பாக நடந்தது. 

கேரள வியாபாரிகள் தோவாளை மார்க்கெட்டில் திரண்டு பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.


Post a Comment

புதியது பழையவை