நாகர்கோவிலில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் – போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை


குமரி மாவட்டத்தில் அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதால் விபத்துக்கள் நேரிட கூடும் என்றும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திற்கு புகார்கள் சென்றது.


 இதையடுத்து மாவட்டம் முழுவதும் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர விட்டார். மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.


 நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியில் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்தனர். உடனே அந்த பஸ்சை தடுத்து நிறுத்தினார். பஸ்சில் உள்ளே இடமிருந்த பிறகும் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.


இதையடுத்து அந்த மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். 


போலீசாரின் சோதனையின்போது பள்ளி மாணவர்களும் சிக்கினார்கள். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அந்த மாணவர்களிடம் பேசினார்.அவர்களின் வயது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஒரு மாணவனுக்கு 18 வயதுக்கு குறைவாகவே இருந்தது. உடனே அந்த மாணவரை எச்சரித்தார். வாகன ஓட்டும்போது ஹெல்மெட் லைசென்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும். சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டும். சிறு வயதிலேயே சாலை விதிகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக வாகனம் ஓட்டுவது நமக்கு நல்லதல்ல என்று அறிவுரைகளை வழங்கினார். 


ஹெல்மெட் மற்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Post a Comment

புதியது பழையவை