குமரி மாவட்டத்தில்விநாயகர் சிலைகள் 2 இடங்களில் கரைப்பு


குமரி மாவட்டத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 2 இடங்களில் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

கன்னியாகுமரி நாகர்கோவில் :  குமரி மாவட்டத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு 2 இடங்களில் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. 

விநாயகர் சிலை பிரதிஷ்டை 

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சதுர்த்தி அன்று இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டன. 

இதுபோக வீடுகள் மற்றும் கோவில்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் சிலை வைக்கப்பட்ட 3-வது நாளில் இருந்து கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

ஊர்வலம்-கரைப்பு

 அதன் ஒரு பகுதியாக சிவசேனா சார்பில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 45 விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்டன.

 பின்னர் ஊர்வலம் மேளதாளம் முழங்க சுசீந்திரம், கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.


Post a Comment

புதியது பழையவை