ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்:கோட்டார் ரெயில் நிலையத்தில் ஓய்வு எடுக்கும் இளைஞர்கள்


ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்  நடப்பதையொட்டி கோட்டார் ரெயில் நிலையத்தில் இளைஞர்கள் ஓய்வு எடுக்கிறார்கள். 

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

 இதற்காக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தினமும் 3 ஆயிரம் பேர் தேர்வுக்காக அழைக்கப்படுகிறார்கள்.

 போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த தேர்வு நள்ளிரவில் மட்டும் நடத்தப்படுகிறது. தேர்வில் பங்கேற்பதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் தினமும் ரெயில்கள், பஸ்கள் மூலம் நாகர்கோவிலுக்கு வருகிறார்கள்.

 அவர்கள் தேர்வு முகாமில் பங்கேற்று விட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இரவில் தேர்வில் பங்கேற்று விட்டு காலையில் ரெயில் நிலையம் வருபவர்களுக்கு சொந்த ஊர் செல்ல இரவில் தான் ரெயில்கள் உள்ளது. இதனால் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இளைஞர்கள் தங்கி ஓய்வெடுக்கிறார்கள்.

 இதையொட்டி கோட்டார் ரெயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக இளைஞர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.


Post a Comment

புதியது பழையவை