மீன்பிடி தொழிலுக்காக சென்று ஓமனில் தவித்த குமரி மீனவர்கள் 7 பேர் ஊர் திரும்பினர்.
அவர்கள் கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
குமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த ஜார்ஜ் ஜேசன், ஹெர்பாலின், குமார், ராஜாக்கமங்கலம் துறை சகாயம் கிப்ஸ்டன், பிரவீன்குமார், ஜார்ஜ், பெரியகாடு அந்தோணி சிலுவை ஆகியோர் மீன் பிடி தொழில் செய்ய ஓமன் நாட்டுக்கு சென்றனர்.
அங்குள்ள முதலாளியிடம் கடந்த மார்ச் மாதம் 7 பேர்களும் வேலைக்கு சேர்ந்தனர். அப்போது குமரி மீனவர்களின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்து கொண்டதுடன், சம்பளத்தையும் முதலாளி கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் குமரி மீனவர்கள் உணவு மற்றும் தங்கும் இடமின்றி தவித்தனர். மேலும் குமரி மீனவர்கள் ஒவ்வொருவரும் ரூ.1½ லட்சம் தர வேண்டும் என முதலாளி கூறினார். இதுபற்றி குமரி மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
மீட்பு,
மீட்பு,
அதன்பேரில் தமிழக அரசும், மீன்வளத்துறையும் தலையிட்டு, ஓமனில் தவித்த குமரி மீனவர்கள் 7 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பினர். இந்த நிலையில் மீட்கப்பட்ட குமரி மீனவர்கள் 7 பேரும் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவா்கள் கலெக்டர் அரவிந்தை சந்தித்து நன்றி கூறினார்கள். மேலும் மீட்க துரித நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தார்கள். அப்போது தங்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கருத்துரையிடுக