கன்னியாகுமரி
குழித்துறை, குழித்துறை நகராட்சி பகுதியில் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் நகராட்சி பகுதியில் உள்ள தேங்காப்பட்டணம் சாலை, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 7 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து மொத்தம் 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக 7 கடைகளுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
கருத்துரையிடுக