கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே சூரங்குடி எனும் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஒரு பாடத்திற்கான நோட்டு புத்தகத்தை கொண்டு செல்லவில்லை என கோபமடைந்த ஆசிரியர் மோகன் மாணவனை பிரம்பால் கடுமையாக தாக்கியுள்ளார்.
உடலின் பல பகுதிகளில் காயத்தோடு வீட்டிற்கு சென்ற மாணவன் பெற்றோரிடம் புகார் கூறவே, மாணவனின் உடலில் காயமடைந்த பகுதிகளை வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரவச் செய்து பெற்றோர் தனது மகனுக்கு பொதுமக்களிடம் நியாயம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் காயத்துடன் காணப்பட்ட மாணவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி காண்போரை நெஞ்சுறுக்க செய்யும் வகையில் அமைந்தது. இதனால், இவ்விவகாரம் அப்பகுதியில் சூடு பிடிக்க துவங்கியதால் அப்பகுதி மக்கள் அளித்த ஆலோசனையின்படி, பெற்றோர் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தவறு செய்தால் தண்டனை அளிப்பது என்ற பெயரில் தனது கோபாவேசத்தை தீர்க்கும் அளவுக்கு மாணவனை பிரம்பால் காட்டுமிராண்டித்தனமாக ஆசிரியர் தாக்கியிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துரையிடுக