இருசக்கர வாகனத்தில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டது
விபத்துகளில் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்கவும், தங்களை விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் ஹெல்மெட் கண்டிப்பாக அணித்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அதே போன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு எஸ்பி ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களை சாலை அருகே நிறுத்திவிட்டனர். பின்னர் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹிரன் பிரசாத் அறிவுரை வழங்கினார்.
இருசக்கர வாகனத்தில் வரும் போது ஹெல்மெட் கட்டாயம் போட வேண்டும். ஹெல்மெட் போடாமல் பயணம் செய்வது ஆபத்து. குடும்பத்துடன் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார்
மேலும் தொடர்ச்சியாக ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்த வானக ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். இனி தினசரி போக்குவரத்து போலீசாரின் ஹெல்மெட் சோதனை தொடரும்
ஆகவே அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்
கருத்துரையிடுக