காரில் கடத்தி வந்த 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கன்னியாகுமரி சப்-இன்ஸ்பெக்டர் ஹரி குமாரன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் சின்னமுட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்த நாகமணி (வயது 20), கன்னன்குளத்தைச் சேர்ந்த நீலக்கண்ணன் (34) என்பதும் தெரியவந்தது. இவர்கள் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்
கருத்துரையிடுக