11-ந் தேதி தொழிற்பழகுனர் தேர்வு முகாம் கலெக்டர் அரவிந்த் தகவல்..



கன்னியாகுமரி நாகர்கோவில்:

 நாகர்கோவிலில் 11-ந்தேதி தொழிற்பழகுனர் தேர்வு முகாம் நடக்கிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிற்பழகுனர் தேர்வு முகாம் 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மண்டல திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் இயக்குனரகம் இணைந்து குமரி மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தொழில்பழகுனர் தேர்வு முகாமை வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்துகின்றன. இந்த முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சிப் பெற்று தற்போது வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்களும், தொழிற்பழகுனர் சட்டம் 1961 -ன் கீழ் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தொழிற்பழகுநர் திட்டத்தில் இணைந்து ஐ.டி.ஐ தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுனர் பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்களும் கலந்து கொள்ளலாம்.


உதவித்தொகை இதில் பங்கேற்று தேர்வு பெற்று, தொழில் பிரிவுகளில் ஒரு வருட தொழிற்பயிற்சியினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7700 மற்றும் இரு வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சியினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு ரூ.8050 தொழிற்பழகுனர் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படும். தொழிற்பழகுனர் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தொழிற்பழகுனர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுனர் சான்று வழங்கப்படும். இந்த முகாமில் பங்கு பெறும் பொருட்டு பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தாங்கள் சார்ந்த விவரங்களை www.apgrenticeshipindia.org என்ற இணையதள முகப்பில் காணும் அப்ரன்டிஸ்ஷிப் மேளா மூலம் உள்நுழைந்து வலது பக்கத்தில் காணும் கேன்டிடேட் மற்றும் எஸ்டாபிளிஸ்மெண்ட் ரெஜிஸ்டிரேசன் மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04652-264463, 9499055804 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 



  

Post a Comment

புதியது பழையவை