கன்னியாகுமரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணியை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார்.
பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டி: உப்பு காற்று வீசுவதால் சிலையில் உள்ள உப்பு படிமத்தை அகற்றி மேலும் உப்பு படியாமல் இருக்க பாலி சிலிகான் கோட்டிங் கொடுத்து சிலையை பாதுகாக்க இப்பணி நடைபெறவுள்ளது. இப்பணி சுமார் 150 நாட்கள் நடைபெறும். நவம்பர் 1ம் தேதி பணி முடிவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துரையிடுக