ெகால்லங்கோடு அருகே புதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்கு பின்பு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் அடக்கம் ெசய்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி கொல்லங்கோடு அருகே புதைக்கப்பட்ட உடலை 18 நாட்களுக்கு பின்பு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் அடக்கம் ெசய்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- விபத்தில் இறந்தார் கொல்லங்கோடு அருகே உள்ள கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டஸ் (வயது60). இவர் கடந்த மாதம் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்து கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து உடலை அவரது தாய், தந்தையை அடக்கம் செய்துள்ள கல்லறை தோட்டம் அருகே அடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்றனர்.
இதற்கு இறந்தவரின் சகோதரர் கிறிஸ்டோபர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், குடும்பத்தினர் அனைவரும் இருந்ததால் அவரது எதிர்ப்பை யாரும் பொருட்படுத்தாமல் அடக்கம் செய்தனர். உடல் தோண்டி எடுப்பு இந்த நிலையில் அடக்கம் செய்து 18- நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் இறந்தவரின் உடலை, அவரது சகோதரர் கிறிஸ்டோபர் அவரது மனைவி ரீனா, உறவினர்கள் ராஜூ, சுரேஷ் உள்பட சிலர் தோண்டி எடுத்தனர். ெசாத்து விவகாரம் காரணமாக உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்த முயன்றதாக தெரிகிறது.
கருத்துரையிடுக