சிவகார்த்திகேயன் ஜானர்
சிவகார்த்திகேயனின் சக்சஸ் பக்கெட் லிஸ்டில் அடுத்ததாக வந்து சேர்ந்திருக்கிறது ‘டான்’. டாக்டரில் நடிப்பில் கொஞ்சம் வித்தியாசம் காட்டிய சிவா இதில் மீண்டும் தனது காமெடி கிராஃபிற்கு திரும்பியிருக்கிறார். காமெடி, எமோஷன், டான்ஸ் எல்லா ஏரியாவிலும் வழக்கம் போல் சிவாவின் சிக்ஸர்கள்
மீண்டும் நிருபித்த எஸ்.ஜே
பூமி நாதனாக வரும் எ.ஜே.சூர்யாவின் மிரட்டலான நடிப்பு படத்தின் மாபெரும் பலமாக அமைந்திருக்கிறது. அவருக்கு உரித்தான பாடிலாங்குவேஜ்ஜூம், டயாலக் டெலிவரியும் தியேட்டரில் அப்ளாஸ்களை அள்ளுகிறது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி காஸ்டிங்கை (கதாபாத்திரத்தேர்வு) மிகத் தெளிவாக செய்துவிட்டார். அதுவே படத்தின் வேலையை பாதிமுடித்துவிட்டது. வழக்கமான கமர்ஷியல் படங்களில் கதாபாத்திரங்களை கையாளுவதுபோலில்லாமல் அவைகளுக்கான வெயிட்டேஜ்ஜை கொடுத்திருப்பது சிறப்பு.
முதல் பாதி கலகலவென செல்ல, இராண்டாம் பாதி கமர்ஷியல் படங்களுக்கே உரித்தான கிளிஷேக்களால் நெழிய வைக்கிறது. ஓவர் டோசேஜ் அட்வைஸ்களை கொஞ்சம் குறைத்திருக்கலாம். படத்தின் எல்லா இடங்களிலும் இருக்கும் பாசிட்டிவ் நேச்சுர் கனவை துரத்தும் இளைஞர்களுக்கு நிச்சயம் மோட்டிவேஷன் டானிக். இராண்டாம் பாதியை இன்னும் கொஞ்சம் விரைவாக முடித்திருக்கலாம் என்று கமெண்டுகளை தியேட்டரில் பார்க்க முடிகிறது
ராக் ஸ்டார் அனி
படத்தில் ஒரு ஹீரோ சிவகார்த்திகேயன் என்றால் இன்னொரு ஹீரோ அனிருத். பாடல்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். பாஸ்கரனின் ஒளிப்பதிவு சிறப்பு.. முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இராண்டாம் பாதியிலும் தொடர்ந்து இருந்தால் டான் இன்னும் கொண்டாடப்பட்டிருப்பான்
KUMARISANGAMAM RATING : 3.5/5
கருத்துரையிடுக